வானில் ஏற்படும் அரிய நிகழ்வு – இலங்கையர்களும் பார்வையிடலாம்

வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் காட்சியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் ஒரு அரிய வானக் காட்சி நடைபெறுகிறது, அங்கு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 7 கோள்களை வரிசையாகக் காணலாம்.
28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இலங்கையிலிருந்தும் இந்தக் காட்சி தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூமியைத் தவிர, சூரிய குடும்பத்தை சேர்ந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன.
இந்த அரிய நிகழ்வு மீண்டும் 2040ஆம் ஆண்டில்தான் நிகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.