போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் – வத்திக்கான்

இரு நுரையீரல்களிலும் நிமோனியாவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலையில் “சிறிது முன்னேற்றம்” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
88 வயதான அவரது உடல்நிலை குறித்து உலகளாவிய கவலைகள் நிலவி வரும் நிலையில், வத்திக்கான் தனது மாலை செய்திக்குறிப்பில் “பரிசுத்த தந்தையின் மருத்துவ நிலைமைகளில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
“இன்று சில ஆய்வக சோதனைகள் மேம்பட்டுள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவர் மேற்கொண்டு வரும் மருந்து சிகிச்சைகள் பலனைக் காட்ட சிறிது நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)