CT Match 06 – அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஒருசில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.
237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
3வது விக்கெட்டுக்கு டேவன் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ரச்சின் ரவீந்திரா 95 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் விளாசினார். ஐசிசி தொடரில் இவரின் 4வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
6வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ் உடன் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.