இரட்டை நிமோனியா காய்ச்சல் – போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்

போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இரட்டை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குச் சிறுநீரகச் செயல்பாட்டில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளதென வத்திகான் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சுவாசப் பிரச்சினையை எதிர்நோக்கியதால் 88 வயது போப்பிற்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்தது.
அதன் பிறகு அவருடைய நிலை சற்று மேம்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 14ஆம் திகதி ரோமின் Gemelli மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை மோசமாய் இருப்பதாக வத்திகன் முதல் முறையாக நேற்று முன்தினம் தகவல் அளித்தது.
இருப்பினும் நேற்றிரவு அவருக்குச் சுவாசப் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை என்று வத்திகான் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 3 visits today)