பிரித்தானியாவில் மீட்கப்பட்ட மனித எச்சம் : முக்கிய சாலைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு!

பிரித்தானியாவில் நேற்று (22.02) மாலை இரண்டு மோட்டார் பாதைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து M4 இன் 20 மற்றும் 21 சந்திப்புகளுக்கு இடையில் – ஆல்மண்ட்ஸ்பரி மற்றும் ஆவ்க்லிக்கு இடையில் உள்ள சாலைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
40 வயதுடைய நபர் ஒருவரின் எச்சங்களே மேற்படி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு என்ன நேர்ந்தது அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பில் அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)