பெருவில் இடிந்து விழுந்த ஷாப்பிங் சென்டரின் மேற்கூரை : மூவர் பலி, பலர் படுகாயம்!

பெருவின் வடமேற்கு நகரமான ட்ருஜில்லோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் சென்டரில், கூரை இடிந்து விழுந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 79 ஆக உள்ளது, ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூரை திடீரென இடிந்து விழுவதற்கு முன்பு ஒரு பெரிய சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 28 times, 1 visits today)