வரி ஏய்ப்பு விசாரணையைத் தீர்க்க இத்தாலிக்கு 340 மில்லியன் செலுத்த கூகிள் ஒப்புதல்

2015-2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் முறையாக வரி செலுத்தத் தவறியதற்காக இத்தாலி தலைநகரான மிலன் வழக்குரைஞர்கள் கூகுள் மீது வழக்கு விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானங்கள் குறித்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனை ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ள கூகுள், வரி தணிக்கையுடன் வழக்கு இல்லாமல் தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளது.
கூகுள் தன் மீதான வரி ஏய்ப்பு விசாரணையைத் தீர்ப்பதற்காக 326 மில்லியன் யூரோ ($340 million) கொடுக்க ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த வழக்கை முடித்துக் கொள்வதாக இத்தாலிய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மிலன் தலைமை வழக்கறிஞர் மார்செல்லோ வயோலா, ”ஜனவரி 28ஆம் திகதி இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கூகுள் நிறுவனத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.