பிரிக்ஸ் நாடுகளின் இறக்குமதிகளுக்கு 150 சதவீத வரி : ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்க டாலரை அழிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் இறக்குமதிகளுக்கு 150 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தைப் பயன்படுத்த விரும்பினர்.
ஒருவேளை சீன யுவானாக இருக்கலாம். டாலரை அழிப்பது பற்றிப் பேசும் எந்த பிரிக்ஸ் நாடும் 150% வரிக்கு உட்பட்டதாக இருக்கும். அவர்களின் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்.” எனக் கூறியுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)