UK – மென்செஸ்டர் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்!

பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் எல்லைப் படை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் “அசாதாரண நடத்தையைக் காட்டியதற்காக” 27 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது.
அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் தடுப்பு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மருத்துவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் துரதிஷ்ட வசமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்துறை அலுவலகம் வழக்கை IOPC-க்கு பரிந்துரைத்த பின்னர், மரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)