இரட்டை கோபுர தாக்குதலில் மக்கள் இறந்ததற்கு மக்கள் அங்கு இருந்ததுதான் காரணமா? ட்ரம்பை விமர்சிக்கும் மக்கள்!

கியேவில் நடந்த போருக்கு டொனால்ட் டிரம்ப் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைக் குற்றம் சாட்டுவது, “இரட்டை கோபுரங்களில் இறந்த மக்களை அங்கே இருந்ததற்காகக் குறை கூறுவது போன்றது” என்று உக்ரேனியர் ஒருவர் கூறியுள்ளார்.
உக்ரேனியத் தலைவர் “ஒருபோதும் போரை ஆரம்பித்திருக்கக்கூடாது” என்றும், போரைத் தவிர்க்க “ஒரு ஒப்பந்தம் செய்திருக்கலாம்” என்றும் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் அவரின் கருத்துக்கள் பரவலாக விமர்சிக்கப்படுகின்றன.
ஜெலென்ஸ்கிக்கு எதிரான டிரம்பின் கடுமையான வார்த்தைகள் உலகெங்கிலும் உள்ள தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றன.
இந்நிலையில் மரியுபோலில் 75 நாட்கள் முற்றுகையிடப்பட்டிருந்த 19 வயதான விளாடிஸ்லாவ் பியாடின் ட்ரம்பின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ட்சக்கணக்கான உக்ரேனியர்கள் பாதிக்கப்பட்டு இறந்ததற்கு ஒரே காரணம் ரஷ்யாவின் படையெடுப்புதான். புடின் இந்தப் போரை ஆரம்பித்தார். போர்க்குற்றங்களைச் செய்வது ரஷ்ய வீரர்கள்தான். உக்ரேனிய வீட்டைத் தாக்கும் ஒவ்வொரு ஏவுகணையும் ரஷ்யாவிலிருந்து வருகிறது.
ரஷ்யா செய்ததற்கு ஜெலென்ஸ்கியைக் குறை கூறுவது அறியாமை. அது இரட்டை கோபுரங்களில் இறந்த மக்களை அங்கே இருந்ததற்காகக் குறை கூறுவது போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.