பிரேசில் : இறந்த பட்டாம்பூச்சியை ஊசி மூலம் செலுத்திக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு!

ஆன்லைன் சவாலுக்காக” இறந்த பட்டாம்பூச்சியை ஊசி மூலம் செலுத்திக் கொண்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பிரேசிலிய மாநிலமான பஹியாவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. டேவி நூன்ஸ் என அழைக்கப்படும் குறித்த சிறுவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்த பட்டாம்பூச்சியை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த திரவத்தை தனது வலது காலில் செலுத்தியதாக மருத்துவர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அவர் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், கடந்த புதன்கிழமை மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான விட்டோரியா டா கான்கிஸ்டாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் எந்த வகையான பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுத்தார் என்பதை குறிப்பிடவில்லை.
போலீசார் இப்போது முழு பிரேத பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.