தைவானில் குடிபோதையில் ஜன்னலைக் கதவென்று நினைத்த யுவதிக்கு நேர்ந்த கதி

தைவானின் New Taipei City பகுதியில் 19 வயது யுவதி கட்டடம் ஒன்றிலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
குடிபோதையில் இருந்த ஜன்னலைக் கதவென்று தவறுதலாக எண்ணிய அவர் நான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாகத் தரையில் விழும் முன் பந்தல் ஒன்றின் மீது பெண் விழுந்தார். அதனால் அவருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
சத்தம் கேட்ட அக்கம்பக்கக் குடியிருப்பாளர்கள் காவல்துறைக்குத் தகவல் தந்தனர். பெண் சுய நினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டது. தமது கவனக்குறைவால் சம்பவம் நேர்ந்ததாகப் பெண் ஒப்புக்கொண்டார்.
(Visited 29 times, 1 visits today)