வங்காள தேசத்திற்கு அரசியல் ரீதியாக மீண்டும் ஆட்சிக்கு வருவதாக ஷேக் ஹசீனா சபதம்

கடந்த ஆண்டு அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கடுமையாக சாடி அரசியல் ரீதியாக மீண்டும் ஆட்சிக்கு வருவதாக சபதம் செய்துள்ளார்.
ஊடக அறிக்கைகளின்படி, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பங்களாதேஷில் வன்முறை மற்றும் அநீதிக்கு ‘குற்றவாளி’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவுவேன், மேலும் அவர்களின் கொலையாளிகள் பங்களாதேஷில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வேன். நான் திரும்பி வருவேன். ஒருவேளை அதனால்தான் அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருக்கிறான்” என்று அவர் மேலும் கூறினார்.