இலங்கை: அதிக வாகன விலைகள்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஹர்ஷ டி சில்வா

வாகனங்களின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் வாகன இறக்குமதி அபாயகரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமல் போகலாம் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய வாகன விலைகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த எம்.பி., டொயோட்டா ரைஸின் விலை ரூ. 12.2 மில்லியன், டொயோட்டா யாரிஸ் ரூ. 18.5 மில்லியன் மற்றும் ப்ரியஸ் ரூ. 28.9 மில்லியன்.
“இதன் காரணமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் அதிகளவு வரி வருமானம் வாகன இறக்குமதி மூலம் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சுமார் 1.6% அதிகரிக்க வேண்டும் மற்றும் அதில் ஒரு பகுதி வாகன இறக்குமதியில் இருந்து வருகிறது. எனவே, வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது,” என்றார்.
தற்போதைய விலையில் யாரால் வாகனங்களை வாங்க முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நாட்டில் இவ்வாறான விலையில் வாகனங்களை கொள்வனவு செய்யக்கூடியவர்கள் எவரும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த காரணிகளை மேற்கோள் காட்டி, தற்போதைய சூழ்நிலையில் வாகன இறக்குமதி மிகவும் அபாயகரமானது என எம்.பி தெரிவித்துள்ளார்.