லண்டன் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நகரங்களைத் தாக்குவதற்கு பச்சைக்கொடி : ஐரோப்பிய நாடுகள் மத்தியில் சலசலப்பு!

லண்டன் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நகரங்களைத் தாக்குவதற்கு டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டியதாக கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ
ரோப்பியர்கள் கண்டத்தின் பாதுகாப்பிற்கு அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறிய கருத்துகளுக்கு ரஷ்ய பிரச்சாரகர்களும் கிரெம்ளின் ஊதுகுழல்களும் வியப்படைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது நாம் உண்மையில் பிரஸ்ஸல்ஸ், லண்டன் மற்றும் பாரிஸைத் தாக்க முடியும். பிரிவு 5 ஐ மறந்துவிட்டு, அமெரிக்கர்கள் உதவ முன்வருவதை மறந்துவிடலாம்.” என அரசியல் விஞ்ஞானி செர்ஜி மிகேவ் கூறினார்.
இதுவே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூற்றானது நேட்டோ நாடுகளை தாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது.