பரிசுத்த பாப்பரசரின் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.
88 வயதான பாப்பரசர், கடந்த 6ஆம் திகதி மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக இத்தாலியின் உரோம் நகரில் உள்ள கெமேல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர்ச்சியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 21 times, 1 visits today)