செய்தி விளையாட்டு

IPL Update – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

18வது IPL தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

இதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 22ந்தேதி தொடங்கும் IPL தொடர் மே 25ந்தேதி நிறைவடைகிறது.

மார்ச் 22ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதுகிறது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் சவாலை பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக தொடங்குகிறது. இந்த ஆட்டம் மார்ச் 23ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

இந்நிலையில் இந்த முதல் போட்டியில் விளையாட மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் என்னவெனில், கடந்த சீசனில் மும்பை அணி 3 முறை குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. முதல் 2 போட்டிகளில் கேப்டன் பாண்ட்யாவுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. ஆனால் தங்களது கடைசி லீக் ஆட்டத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் மும்பை பந்து வீசி முடிக்கவில்லை.

இதனால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு IPL நிர்வாகம் ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது.

கடந்த முறை மும்பை அணி லீக் சுற்றோடு வெளியேறியதால் இந்த சீசனின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!