இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை : நிழலான பகுதிகளில் இருக்க அறிவுத்தல்!

இலங்கையில் தற்போது நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பமான வானிலையே நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
வானிலை ஆய்வுத்துறை இன்று (17.02) மாலை வெளியிட்ட இந்த அறிவிப்பானது நாளை (18.02) வரை செல்லுப்படியாகும்.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)