இலங்கை: பேருந்து – வேன் விபத்தில் 10 ஆடைத் தொழிலாளர்கள் காயம்

கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று 10 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வேன் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கந்தகெட்டியவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய – பதுளை பிரதான வீதியின் போபிட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் இருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை மற்றும் கந்தகெட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)