119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளத.
ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 பேரும் கடந்த 5 ஆம் திகதி இந்தியா வந்தடைந்தனர்.
இந்த நிலையில், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரின் கை, கால்கள் கட்டப்பட்டது நாடாளுமன்றம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் நாடு கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் கிடையாது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
அமெரிக்காவின் விமானப்படை விமானம் தங்கள் எல்லைக்குள் நுழைவது தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என கூறும் இந்த நாடுகள், சிறப்பு விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டினரை அழைத்து வருகின்றன.
இரண்டாம் கட்டமாக 119 பயணிகளுடன் சி17 விமானப்படையில் அமெரிக்காவில் இருந்து அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
தங்களின் 20 மணி நேரத்துக்கு மேலான இந்த பயணத்தில் தங்கள் கைகள் விலங்கிடப்பட்டும் கால்கள் கட்டப்பட்டுதான் இருந்ததாக பஞ்சாப்பை சேர்ந்த தல்ஜித் சிங் என்ற பயணி தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.