டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இனி பும்ரா தான் கேப்டன்.!

நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று திஸ்போர்ட்ஸ்டாக் செய்தி வெளிட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் பும்ரா அணியின் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று PTI செய்தி நிறுவனம் அறிக்கை கூறுகிறது.
IND vs BAN டெஸ்ட் போட்டிகளில் தொடங்கி பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இறுதி வரை ரோஹித்தின் மோசமான ஸ்கோர்கள் அவரது எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், வரும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது. சமீபத்தில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று ரோஹித் முன்னதாக திட்டவட்டமாக கூறியிருந்த நேரத்தில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
இதனிடையே, பும்ராவின் உடற்தகுதி குறித்த கேள்வியும் இருக்கிறது. அவர் இன்னும் முழு வீச்சில் பந்துவீசத் தொடங்கவில்லை என்றும், ஒருவேளை அவர் ஐபிஎல் 2025 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரண்டு முறை இந்திய அணியை பும்ரா வழிநடத்தியிருந்தார். பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில், ரோஹித் இல்லாதபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற பும்ரா அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.