டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் – 15 பேர் மரணம்

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். நடைமேடை 13,14,15ல் நின்றிருந்த உத்தர பிரதேசம் செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று குழந்தைகளும் அடங்கும். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ரெயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)