ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

ரஷ்யாவின் தெற்குப் பகுதியான அல்தாயில் இன்று (15.020 அதிகாலை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:48 மணிக்கு (0148 GMT) இந்த நிலநடுக்கம் பதிவானது.
அல்தாய் குடியரசின் தலைநகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 282 கிமீ தொலைவில், கோஷ்-அகாச் கிராமத்திலிருந்து மேற்கே சுமார் 28 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ரஷ்ய அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது.
அல்தாய் குடியரசில் உள்ள ரஷ்ய அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம், அல்தாய் குடியரசு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் குறிப்பிட்டது.
(Visited 6 times, 1 visits today)