விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Babar_Azam-Virat_Kohli_1683558786815_1693621581192-1296x700.jpg)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் – நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன்ஸ் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கராச்சியில் இன்று(பிப்ரவரி 14) நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மேலும், இந்தப் போட்டியில் அசாம் 10 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களைக் கடந்தவர் என்ற தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையையும் சமன் செய்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார் பாபர் அசாம்.
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 6000 ரன்கள் எடுத்த வீரர்கள்
பாபர் அசாம்* – 123 இன்னிங்ஸ்
ஹஷிம் ஆம்லா-123 இன்னிங்ஸ்
விராட் கோலி-136 இன்னிங்ஸ்
கேன் வில்லியம்சன் -139 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் -139 இன்னிங்ஸ்
ஷிகர் தவான் -140 இன்னிங்ஸ்
விவ் ரிச்சர்ட்ஸ் -141 இன்னிங்ஸ்
ஜோ ரூட் -141 இன்னிங்ஸ்