இலங்கை பிடிகல பிரதேசத்தில் 34 வயதான நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

பிடிகல, மெட்டிவிலையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அதிகாலை 34 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெட்டிவிலிய, கல்ஹிரிய வளைவுக்கு அருகில் உள்ள வீதியில் கத்தியால் குத்தப்பட்ட நபரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்ட நபர், அருகில் உள்ள இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூரிய பொருளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் எலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(Visited 1 times, 1 visits today)