ஜிம்பாப்வேயில் நேருக்கு நேர் மோதி கொண்ட வாகனங்கள் : 17 பேர் ஸ்தலத்திலேயே பலி!

ஜிம்பாப்வேயில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 24 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்காவின் தெற்கு எல்லையில் உள்ள பெய்ட்பிரிட்ஜ் அருகே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகரான ஹராரேவிலிருந்து பெய்ட்பிரிட்ஜுக்கு 65 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது லாரி மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலேயே 17 பேர் இறந்ததாகவும், பீட்பிரிட்ஜில் உள்ள மருத்துவமனையில் தலையில் ஏற்பட்ட காயங்களால் ஏழு பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.