இலங்கை ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள ஆறு சிங்கக் குட்டிகளின் பெயர்கள் அறிவிப்பு
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-13-at-16.44.33-1280x700.jpeg)
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு புதன்கிழமை (பிப்ரவரி 12) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டது.
பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4000 பெயர்களில் இருந்து மூன்று மாத வயதுடைய சிங்கக் குட்டிகளின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஒற்றை ஆண் சிங்கக் குட்டிக்கு மேகா என்றும், ஐந்து பெண் குட்டிகளுக்கு தாரா, ஆக்ரா, பூமி, அகிரா மற்றும் எல்சா என்றும் பெயரிடப்பட்டது.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே சிங்கக்குட்டிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)