இலங்கை: கைது செய்யும்போது பொலிஸ் உத்தியோகத்தரின் காது மடலைக் கடித்த கொள்ளையன்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-28-1280x700.jpg)
அனுராதபுரம் புனித பிரதேசத்தில் யாத்திரிகர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் சந்தேகநபரை கைது செய்யும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காது மடலின் ஒரு பகுதியை கொள்ளையன் கடித்துள்ளார்.
காயமடைந்த அதிகாரி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடமலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் (SI) ருவன்வெலிசேயவில் இருந்து ஸ்ரீ மஹா போதி வரையான பாதைக்கு அருகில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் நீர் தேக்க தொட்டிக்கு அருகில் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. அதிகாரி அவரைக் கைது செய்ய முற்பட்டபோது, சந்தேக நபர் அவரது காது மடலின் ஒரு பகுதியைக் கடித்துக் கொண்டார். இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த மற்றொரு அதிகாரியின் உதவியுடன், சந்தேக நபரை எஸ்ஐ கைது செய்தார்.
சந்தேக நபர் அநுராதபுரம் சங்கமித்த மாவத்தையில் வசிப்பவர் எனவும், குற்றவியல் அச்சுறுத்தல், பொலிஸ் உத்தியோகத்தருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமையக பொலிஸ் அநுராதபுரம் பொலிஸ், சிஐ ஆர்.எம். ஜயவீர, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.