ஜெர்மனியில் ரயிலுடன் மோதிய லாரி : ஆபத்தான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/ger-1.jpg)
ஜெர்மனியில் இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாம்பர்க்கில் ரயில் ஒன்றுடன் லாரி ஒன்று மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன், எஞ்சிய 10 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ICE ரயிலில் இருந்த 250 க்கும் மேற்பட்டோர் காயமடையவில்லை, ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துச் செல்ல போலீசார் பேருந்துகளை அழைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தை தொடர்ந்து லோயர் சாக்சனியில் உள்ள ஹாம்பர்க்-ஹார்பர்க் மற்றும் மாஷென் இடையேயான ரயில் பாதை தற்காலிகமாக மூடப்பட்டு, பிற ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.