இலங்கையில் மீளவும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு : மின்சார சபையின் அறிவிப்பு!

இலங்கையில் நாளை (13) அமல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து நாளை காலை அறிக்கை வெளியிடப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின்வெட்டு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது.
இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு சுமார் 300 மெகாவாட் மின்சாரத்தை இழந்தது.
எனவே, நேற்று (11) மற்றும் நேற்று முன்தினம் (10) மின்வெட்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், போயா தினம் காரணமாக இன்று (12) மின்வெட்டு இருக்காது என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)