வட அமெரிக்கா

அமெரிக்காவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகும் விமானங்கள் – 2 வாரங்களில் 3வது விபத்து

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தனியார் விமானமொன்று மற்றொரு விமானத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விமானம் Scottsdale விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.

உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.40 மணி வாக்கில் விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தனியார் வளாகத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதியது.

சம்பவத்தையடுத்து மூடப்பட்ட ஓடுபாதை இன்னும் சிறிது காலம் அப்படியே மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆகாயப் போக்குவரத்து மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து நேர்ந்துள்ள 3 மோசமான ஆகாயப் போக்குவரத்து விபத்துகளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!