இலங்கையில் இருந்து வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களுக்காக 3,40,000 பேரை அனுப்ப முடிவு
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20250212-WA0000.jpg)
இந்த வருடத்தில் 3,40,000 இலங்கையர்களை வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்களுக்காக அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகளுக்கான தெளிவுபடுத்தல் செயலமர்விலே,இது பற்றித் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தெரிவித்த பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க:
இந்த ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மூலம் ஏழு பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வெளிநாட்டு அந்நிய செலாவணியாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மூன்று இலட்சத்து 14,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றிருந்தனர். அதற்கிணங்க அந்த வருடத்தில் 6. 51 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நாட்டுக்கு அன்னியச் செலாவணியாகக் கிடைத்தது. இந்த வருடத்தில் குவைத்துக்கு 84,000 பேரையும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு 50,000 பேரையும் சவூதி அரேபியாவிற்கு 52,000 பேரையும் அனுப்புவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் பணியகத்தின் மூலம் நேரடி வேலை வாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு 15,900 பேரும் ஜப்பானுக்கு 9000 பேரும் தென்கொரியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு 8,000பேரையும் அனுப்புவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.