இலங்கை

சீனாவின் அரசியல் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகும் இலங்கை!

சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கினால் இலங்கையில் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்

பிரிட்டனின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்செல் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

எனது நண்பர் குறிப்பிட்ட கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் உக்ரைன் மீதான ரஸ்ய படையெடுப்பின் தாக்கம் ஆகிய அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.

நீண்டகாலமாக நிதியை தவறான முகாமை செய்தமை உட்பட கட்டமைப்பு பலவீனங்களால் மேற்சொன்னவற்றின் தாக்கங்கள் அதிகரித்துள்ளன.

நாங்கள் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் இந்த பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமாக கலந்துகொள்ளுமாறு அனைத்து கடன்வழங்குநர்களையும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் எனவும் அன்ரூமிட்ச்செல் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!