செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை ஸ்ரீ அய்யனார் கோவில் விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் பங்கேற்றுள்ளன 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் அடக்கி வருகின்றனர்

பல காளைகள் காளையர்களின் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்து தப்பித்துச் சென்றது சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது

வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!