எஃகு மற்றும் அலுமினியம் மீதான ட்ரம்பின் வரி கொள்கை : தென் கொரியாவும் பாதிப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/01/Trump-has-again-warned-Hamas-2-1080x700.jpg)
எஃகு மற்றும் அலுமினியம் மீதான டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரிகள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகள் சிலரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவற்றில், கனடா, மெக்ஸிகோ மற்றும் பிரேசிலுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு எஃகு ஏற்றுமதி செய்யும் நான்காவது பெரிய நாடான தென் கொரியாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்காலிக ஜனாதிபதி சோய் சாங்-மோக், அரசாங்கம் டிரம்பின் நிர்வாகத்துடன் கட்டணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை காரணமாக எஃகு வரிகளுக்கு விலக்கு அளிக்க ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை “மிகப்பெரிய பரிசீலனை” செய்வதாகவும் டிரம்ப் நேற்று இரவு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 4 visits today)