கொலம்பியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு கால்பந்து வீரர்கள் பலி!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/colo.jpg)
கொலம்பியாவில் நான்கு கால்பந்து வீரர்கள் மின்னல் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இடியுடன் கூடிய மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ஜெய்டி மோரலெஸ், டேனிலா மொஸ்குவேரா, லஸ் லேம் மற்றும் எடெல்வினா மொஸ்குவேரா ஆகியோர் மைதானத்தின் ஓரத்தில் இருந்த கொட்டகையில் ஒளிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கொலம்பியாவின் காஜிபியோவில் ஒரு மரத்தில் மின்னல் தாக்கியது, நான்கு பெண்கள் இறந்தனர். அவர்களுடன் இருந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு பெண்கள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பெருவில் நடந்த ஒரு போட்டியின் போது மின்னல் தாக்கி ஒரு கால்பந்து வீரர் கொல்லப்பட்டு ஐந்து பேர் காயமடைந்ததை அடுத்து இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.
(Visited 2 times, 2 visits today)