தென்கொரியாவின் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியரின் விபரீத முயற்சி
தென்கொரியாவின் Daejeon நகரில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
நேற்று அங்குள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.
மாணவி கழுத்திலும் முகத்திலும் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது. பின் மருத்துவமனையில் அவர் இறந்ததாகக் கூறப்பட்டது.
பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றும் சுமார் 40 வயது நிரம்பிய மாதும் கத்திக்குத்துக் காயங்களுடன் சம்பவ இடத்தில் காணப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மனச்சோர்வு காரணமாக மருத்துவ விடுப்பில் இருந்த அவர் சென்ற ஆண்டின் பிற்பகுதியில் வேலைக்குத் திரும்பியுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.





