இலங்கையில் மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட சஜித் பிரேமதாச!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/sajith-2-jpg.webp)
இலங்கையில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கைக் குறை கூறிய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள்மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மையான பிரச்சினை என்ன என்பதை இனங்காண அவர்கள் சிந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தனது x கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும்தான் மின்தடைக்கான உண்மையான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்தடை தொடர்பிலான உண்மை நிலையை இது போன்ற தவறான தகவல்கள்மூலம் மறைக்க முடியாது என்றும், மின் துறையில் சீர்திருத்தங்கள்மூலம் மட்டுமே அதை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்தகைய அமைப்பில் மாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகிறார்.