AI தொழில்நுட்பத்தால் உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து – கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
AI தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அதை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதை பயன்படுத்துவதால் மிக எளிதாக வேலை முடிகிறது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் AI தொழில்நுட்பத்தால் ஏராளமான நபர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெனிவாவில் நடந்த உலக பொருளாதார மன்ற குழுவில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை பொருளாதார நிபுணர் மைக்கேல் என்பவர் பேசும்போது AI தொழில்நுட்பம் வருங்காலத்தில் மோசமான நபர்களால் பயன்படுத்தப்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே அதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக தேர்தல்களில் AI தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்பட்டால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் தவறானவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த உண்மையான தீங்கை கட்டுப்படுத்த சட்டம் இயற்றும் வரை காத்திருக்க வேண்டியதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடி உட்பட பல AI தொழில்நுட்ப செயலிகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது என்றும் இந்த தொழில்நுட்ப மூலம் மில்லியன் கணக்கானோர் வேலை வாய்ப்புகள் இழக்க வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தவறாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்றும் நல்ல விஷயங்கள் குறைந்து தீய நோக்கத்திற்காக இதை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்றும் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய சிக்கல் உண்டாகும் என்றும், அதனால் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து உண்டு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே உலக நாடுகள் உடனடியாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.