மும்பையில் ரூ200 கோடி போதை பொருள் பறிமுதல்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-10-2-1296x700.jpg)
மும்பையில் ரூ200 கோடி போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கும்பலானது, அமெரிக்காவில் இருந்து கூரியர் சேவை அல்லது மனிதர்கள் மூலம் போதைப் பொருளை கடத்தி வந்து, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விநியோகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் 11.54 கிலோ எடையுள்ள விலை உயர்ந்த கோகைன் போதைப் பொருள், 5.5 கிலோ எடையுள்ள கஞ்சா ஜெல்லிகள், கஞ்சா விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.200 கோடியாகும். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்த கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான நால்வருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவின் (என்சிபி) மும்பை மண்டல அதிகாரிகள் கூறியுள்ளனர்.