அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் படையினரால் முட்கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/ae01bc68-c237-47af-b036-e7e20d723036.jpg)
அமெரிக்கா-மெக்சிகோ முட்கம்பி வேலி அமைக்கும் பணியில் அமெரிக்க மரைன்ஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துஜிவானா என்ற இடத்தில் உள்ள சான் சிட்ரோ நுழைவுப் பகுதி வழியே மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினரை எல்லையில் பணியமர்த்த மெக்சிகோ ஒப்புக்கொண்டதை அடுத்து அந்நாட்டின் இறக்குமதிப் பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்.
(Visited 6 times, 6 visits today)