சிங்கப்பூர் விமானத்தில் திடீரென கத்திய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20250208-WA0001.jpg)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊழியர்களிடம் மோசமாக நடந்துகொண்ட பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் தைவானிலிருந்து ஷங்ஹாய் நகருக்கான பயணம் சுமார் 2 மணி நேரம் தாமதமடைந்ததாகத் தெரிகிறது.
குறித்த பயணியின் செயல் சமூக ஊடகத்தில் காணொளியாகப் பகிரப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது பயணி கழிப்பறைக்குச் செல்லவேண்டும் என்று ஊழியரிடம் கூறியுள்ளார்.
அவர் கதவைத் தட்டி, ஊழியர்களை திட்டிக் கூச்சலிட்டுள்ளார். அருகே இருக்கும் சக பயணிகள் நடப்பதைக் கண்டு அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அமைதி காத்த விமான ஊழியர்கள் பின்னர் விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்குத் திருப்பிவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
விமானத்தின் ஊழியர்கள், பயணிகள் ஆகியோரின் பாதுகாப்புக்காக அந்நடவடிக்கையை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.