சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வேலை செய்பவர்களை குறிவைத்து பயணம் மற்றும் பொருளியல் தடை விதித்துள்ளார்.
அமெரிக்க குடிமக்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்பவர்களை அடக்கும்விதமாக டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமது முதல் தவணை பதவி காலத்திலேயே டிரம்ப் இவ்வாறு செய்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அமெரிக்காவுக்கு வருகை புரிந்த நேரத்தில் டிரப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் யார் மீது தடைகள் விதிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
காஸா போர் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் தேடுதல் பட்டியலில் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய ராணுவ அமைச்சர், ஹமாஸ் படைத் தலைவர் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)