வரலாற்றில் மிக வெப்பமான மாதத்தை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை அமைப்பு

உலக அளவில் சென்ற கடந்த தான் வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை அமைப்பு அறிவித்துள்ளது.
குளிர்ச்சியான La Nina பருவநிலைச் சுழற்சி நிகழும் நிலையிலும் போன மாதம் கடுஞ்சூடு நிலவியதாகத் தரவுகள் காட்டுகின்றன.
பருவநிலை மாற்றம் துரிதமடைந்துவருகிறது எனும் அச்சத்தை அது ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தொழிற்புரட்சிக் காலத்துக்கு முன்பிருந்ததைவிடக் கடந்த மாதத்தில் வெப்பம் ஒன்றே முக்கால் செல்சியஸ் கூடுதலாக இருந்தது.
சென்ற 19 மாதங்களில் 18இல் சராசரி உலக வெப்பநிலை, தொழிற்புரட்சிக் காலத்துக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் ஒன்றரை விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது.
(Visited 4 times, 1 visits today)