அமெரிக்கா வழியாக கனடாவிற்குள் நுழைய முயன்ற 15 பேர் கைது
கடந்த சில வாரங்களில் மட்டும் அமெரிக்க எல்லையில் இருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் இருந்து தப்பிக்க சிலர் கனடாவுக்குள் நுழைகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கனடாவின் கடுங்குளிரைத் தாங்குவதற்கான துணிகள் இல்லாமல் பரிதாபமான நிலையில் இருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தனிநபர் தகவல்களை வெளியிட முடியாது என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாகக் குடியேரிகள் கனடாவுக்குள் நுழையலாம் என்பதால் அதிகாரிகள் எல்லைகளில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)