செயற்கைக்கோள்கள், ராக்கெட் ஏவுதலில் வீழ்ச்சி : ரஷ்ய விண்வெளி நிறுவனத் தலைவர் பணிநீக்கம்!
சமீபத்திய ஆண்டுகளில் ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளின் “பேரழிவு” தோல்விகளுக்குப் பிறகு விளாடிமிர் புடினின் ரஷ்ய விண்வெளி நிறுவனத் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் துணைப் பிரதமரும் நெருங்கிய கூட்டாளியுமான 68 வயதான யூரி போரிசோவ், ரோஸ்கோஸ்மோஸ் என்று அழைக்கப்படும் விண்வெளி நிறுவனத்தில் துணைப் போக்குவரத்து அமைச்சர் டிமிட்ரி பகானோவ் ன்பவரால் மாற்றப்பட்டார்.
அவர் செயற்கைக்கோள்கள் மற்றும் ஆளில்லா போக்குவரத்தில் நிபுணராகக் கருதப்படுகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் விண்வெளியில் “ஏவுதலின் எண்ணிக்கையில் பேரழிவு குறைப்பு, அத்துடன் கடுமையான விளைவுகளைக் கொண்ட சம்பவங்கள் மற்றும் விபத்துகளுக்கு போரிசோவின் மந்தமான செயற்பாடு காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட மேற்கத்திய செயற்கைக்கோள் உளவுத்துறையுடன் போட்டியிட தேவையான அளவு இராணுவ செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் ரஷ்யா உயர்த்தத் தவறியதற்கு அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.