சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுங்கள்! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா இலங்கை பிரதமருக்கு கடிதம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க, சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் விக்கிரமதுங்க, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, தனது தந்தையின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு பரிந்துரைத்தமை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடமையை புறக்கணித்தமை என தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில், சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க வலியுறுத்தியுள்ளார்.
(Visited 5 times, 5 visits today)