இலங்கையில் 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை
இலங்கையில 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
இது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
30,000 அல்லது 35,000 என்று சொல்ல முடியாது என்றும், வழமை போன்று பட்டதாரிகள் குழு இருப்பதால், அவர்களில் சிலர் இங்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள காலியிடங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)