அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்திறங்கிய விமானம்!
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடுகடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
C-17 இராணுவ விமானம் நேற்று (04.02) டெக்சாஸில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
விமானத்தில் இருந்த ஒவ்வொரு நாடுகடத்தப்பட்ட இந்தியரும் “சரிபார்க்கப்பட்டதாக” விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் முதல் குழுவினர் இவர்களாக இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணம் செய்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்திய குடிமக்களை நாடுகடத்துவதற்கான முதல் சுற்று தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 2 visits today)