இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது, அவர் சர்வதேச அளவிலான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளார்.
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து இந்த சர்வதேச ஊடக மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தனது கருத்துக்களை வெளியிடவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிட்டத்தட்ட 10 நாட்கள் லண்டனில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)